Edaikazhinadu is the one of the Town Panchayat in Silk city of Kancheepuram District. It was Located 120 km away from Kancheepuram. Edaikazhinadu Town Panchayat was upgraded to second grade Town Panchayat in the year 1984. This is Stiuated in East Coast Road. The Four Boundaries of this Town Panchayat as follows North- Chennai City, South Pondicherry , East- Bay of Bengal and west the district capital of Kancheepuram. Thotal area of the town panchayat is 34 . Sq km. This Town Panchayat Consists of 21 wards and 6 revenue villages and it is population is 28172 . It is under the Legistratvie assembly of Cheyyur and under the Control of Kancheepuram Parlimentary Constituency. Alambara Fort is Main Place in Edaikazhinadu Town Panchayat.
இடைக்கழிநாடு பேரூராட்சி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள 34 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி அமைந்துள்ள சாலைகள் நீளம் 215 கி.மீ மற்றும் 21 வார்டுகளை கொண்டது. இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 2011 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 28172. இப்பேரூராட்சி 1984 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்பேரூராட்சி பகுதி செய்யூர் சட்டமன்ற தொகுதியாகவும், காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியாகவும் கொண்டது. இப்பேரூராட்சியில் கி.பி. 18 ஆம் நுற்றாண்டில் முகமதியர்களால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஆலம்பரை கோட்டை உள்ளது. கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஆலம்பரை பண்டைய நாளில் ஒரு துறைமுகப் பட்டினமாக திகழ்ந்து உள்ளது. ஆலம்பரை படகுத் துறையில் இருந்து சரிகை துண் வகைகள், உப்பு, நெய் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆலம்பரையில் அமைந்திருந்த நாணயச் சாலையில் ஆலம்பரை காசு, ஆலம்பரை வராகன் ஆகிய நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன. இந்நாணயச் சாலையில் பொறுப்பாளராக இருந்த பொட்டிபத்தன் கிழக்கு கடற்கரை வழியாக காசி, இராமேஸ்வரத்திற்கு தீர்த்த யாத்திரை செல்லும் யாத்திரிகர்களுக்காக சிவன் கோயிலும் பெரிய குளம் மற்றும் சத்திரத்தையும் ஏற்படுத்தினார். சங்க கால இலக்கியத்தில் சிறுபாணாற்றுப்படையினை இயற்றிய நல்லுர் நத்தத்தனார் இப்பேரூராட்சிக்குட்பட்ட நல்லுர் கிராமத்தில் பிறந்துள்ளார்
What's New
Town Information
City Name: | Edaikazhinadu Town Panchayat |
Area in SqKm | 34.000 |
District | Kancheepuram |
Taluk | Cheyyur |
Name of Assembly Constituency | Cheyyur |
Name of Parliment Constituency | Kancheepuram |
No of Wards | 21 |
No of Streets | 182 |
2011 Population | |
Present Population |