பிறப்பு மற்றும் இறப்பு சான்று விவரம்
(Birth and Death Registration Details)

  • பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை , பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி.குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் வழிவகை செய்கிறது. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும். பிறப்பு சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளார் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் பெற பாஸ்போர்ட், விசா உரிமம், அயல்நாட்டில் குடியுரிமை பெற ஆகியவற்றிற்கு இன்றியமையாத ஆவணமாகும்.
  • ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவில் உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணம் இன்றி பதிவு செய்யலாம்.
  • 12 மாதங்களுக்கு பிறகு 15 வருடங்களுக்குள் ரூ.200 தாமதக்கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரை பதிவு செய்யலாம்.
    15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது.
  • இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுரைப்படி 01.01.2000 முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும் 01.01.2000க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தை பெயர் வைத்து பிறப்புச் சான்று பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நகராட்சி, மாநகராட்சி அல்லது சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் , பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் (கல்வி சான்று, ஓட்டுனர் உரிமம்) கொண்டு விண்ணப்பிக்கலாம்.இவ்வாறான கால அவகாசம் நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது என இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.(source : https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2023/11/2023110827.pdf)
01.01.2018 பின் பிறந்த குழந்தைகளுக்கு மட்டும் பெயரினை சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர் பிறப்பு சான்றிதழ்களை www.crstn.org என்ற இணையதளம் வழியாக இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இறப்பு சான்றிதழ்களையும் இந்த இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். (From 01.01.2018) Click Here to View Website
To Search / Print Birth Certificate Click Here
To Search / Print Death Certificate Click Here
How Download Birth and Death Certificate - Help Video Click Here
வ.எண் விதிகள்கட்டண விவரம்
1 விதி 9 (1)
22 - 30 நாட்களுக்குள் பதிவு செய்ய காலதாமத கட்டணம்
ரூ.100
2 விதி 9 (2)
31 - 1 வருடத்திற்குள் பதிவு செய்ய காலதாமத கட்டணம்
ரூ.200
3 விதி 9 (3)
1 வருடத்திற்குள் மேல் பதிவு செய்ய காலதாமத கட்டணம்
ரூ.500
4 விதி 10 துணை விதி 1(a) & 1(b)
குழந்தையின் பெயரினை ஒரு வருடத்திற்குள் பதிவு செய்யப்படாமல் இருப்பின் பதிவு செய்ய காலதாமத கட்டணம்
ரூ.200
5 விதி 13 துணை விதி (a)ன்படி
தனியொரு அறிக்கையினை தேடுவதற்கான முதல் ஆண்டிற்கான கட்டணம்
ரூ.100
6 விதி 13 துணை விதி (b)ன்படி
தனியொரு அறிக்கையினை தேடுவதற்கான தேடுதல் தொடரும் கூடுதலான ஒவ்வொரு ஆண்டிற்கான கட்டணம்
ரூ.100
7 விதி 13 துணை விதி (c)ன்படி
பிறப்பு மற்றும் இறப்பு ஒவ்வொன்றிற்கும் தொடர்பான எடு பகுதி வழங்கிட கட்டணம்
ரூ.200
8 கூடுதல் நகல் ஒவ்வொன்றிற்கும் கட்டணம் ரூ.200
9 பிறப்பு மற்றும் இறப்பு பதிவில்லா சான்று பெற கட்டணம் ரூ.100

  • பிறப்பு அல்லது இறப்பு தகவல்களை பிறப்பு இறப்பு பதிவாளரிடம் நிகழ்வு நடந்த நாளிருந்து 21-நாள்களுக்குள் தெரிவித்து பதிவு செய்யப்பட வேண்டும்
  • 21 நாள்களுக்கு அதிகமானால் அதாவது நிகழ்வு நடந்த நாளிருந்து 31 நாள்களுக்குள் பதிவு செய்தால் மேற்கண்ட அட்டவணையில் தெரிவித்தவாறு ரூ.100 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
  • 31 நாள்களுக்கு மேல் ஆனால் 1 வருடத்திற்குள் பதிவு செய்தால் மேற்கண்ட அட்டவணையில் தெரிவித்தவாறு ரூ.200 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
  • 1 வருடத்திற்குள் பதிவு செய்யப்படாத பிறப்பு மற்றும் இறப்பினை வருவாய் கோட்டாட்சியரின் உத்திரவு மற்றும் வரையறுக்கப்பட்ட காலதாமத கட்டணத்தினை செலுத்துவதன் அடிப்படையில் பதிவு செய்ய இயலும். amendment in the said Rules,Rule 9 for sub rule(3) , the following sub-rule shall be substituded,namely(3) Any birth or death which has not been registered within one year of its occurrence shall be registered by an order of the Executive Magistrate not below the rank of a Revenue Divisional Officer

  • School Admission.
  • Inclusion of name of child in Ration Card / Family Register.
  • Entry in Government and Non-Government service and maintenance of service book.
  • Inclusion of name in electoral roll / employment exchange.
  • Issue of Passport / Driving license.
  • AADHAAR /NPR Registration.
  • Marriage and divorce / Separation registration.
  • Deletion of name from Ration Card /Family Register.
  • For the settlement of issues of inheritance.
  • For the settlement of insurance claims.
  • For the settlement of family pension.

  • குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட தேதியில் இருந்து 15 வருடத்திற்குள் குழந்தையின் பெயரினை பதிவு செய்யப்பட வேண்டும்.
  • 31.12.1999க்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட பிறப்பினை 01.01.2000ல் பதிவு செய்யப்பட்டதாக கருதி 15 வருடத்திற்குள் பதிவு செய்ய வேண்டும்
  • 01.01.2000க்கு பிறகு பதிவு செய்யப்பட்ட பிறப்பினை பதிவு செய்யப்பட்ட தேதியில் இருந்து 15 வருடத்திற்குள் பதிவு செய்ய வேண்டும்
  • குழந்தையின் பிறப்பு எப்பொழுது பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் குழந்தையின் பெயரினை 31.12.2024க்குள் பதிவு செய்ய வேண்டும்

  • இறப்பானது மருத்துவ நிலையங்களில் நிகழ்ந்திருந்தால் அதற்கு படிவம் 4 கட்டாயமாக பெற்று பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் வழங்க வேண்டும்
  • இறப்பானது வீடு மற்றும் மற்ற இடங்களில் நிகழும் இறப்பிற்கு அவர் கடைசியாக நோயுற்று இருந்த போது அவருக்கு சிசிச்சை அளித்த மருத்துவ அலுவலரால் படிவம் 4Aல் இறப்பிற்கான காரணம் குறித்து மருத்துவச்சான்று பெற்று சம்பந்தப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் வழங்க வேண்டும்