Cheranmahadevi taluka panchayat town in Tirunelveli district is located in the Test Veeravanallur. The best places on the shore Thamirabarani tirupputaimarutur- Cheranmahadevi lies between them. 19587 people live in the 2011 census. Divided into 18 wards. Swim. Sarvodaya Sangh headquarters located kiramotayam private textile and Khadi. The first graduate class of preschool educational institutions were set up here. All basic amenities are growing rich Veeravanallur Town Panchayat
திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி தாலுகாவில் அமைந்துள்ளது வீரவநல்லூர் தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். தாமிரபரணி கரையில் அமைந்த சிறந்த தலங்களான திருப்புடைமருதூர்-சேரன்மகாதேவி இவற்றிற்கு இடையில் அமைந்துள்ளது. 2011 கணக்கெடுப்பின்படி 19587 மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. பேரூராட்சியின் பரப்பளவு 9.13 ச.கி.மீ. சாலை வசதிகள் 35.11 கி.மீ. நீளம் உள்ளது. நீர்வளம் ஆதாரம் தாமிரபரணி ஆறு ஆகும் 5 மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகள் மூலம் 2330000 லிட்டர் குடிநீர் தினமும் விநியோகிக்கப்படுகிறது. இப்பகுதியில் விவசாயம், கைத்தறி , பாய் நெசவு மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. தனியார் நூற்பாலை மற்றும் காதி கிராமோதயம் சர்வோதயா சங்கம் தலைமயிடம் அமைந்துள்ளது. இங்கு பாலர் வகுப்பு முதல் பட்டதாரி கல்வி நிறுவனங்கள் வரை அமையப்பெற்றுள்ளன. வீரவநல்லூர் பேரூராட்சி அடிப்படைய வசதிகள் அனைத்தும் நிறைந்த வளர்ந்து வரும் நகரமாகும்.
Town Information
City Name: | Veeravanallur Town Panchayat |
Area in SqKm | 9.130 |
District | TIRUNELVELI |
Taluk | CHERANMAHADEVI |
Name of Assembly Constituency | AMBASAMUDRAM |
Name of Parliment Constituency | TIRUNELVELI |
No of Wards | 18 |
No of Streets | 129 |
2011 Population | 19585 |
Present Population | 20550 |