Palacode is fast development Town Panchayat in Dharmapuri District. Scarcity of the land has been identified as the major constraint for growth. The town is spread over 2.56 square KM and it holds a population of approximately 21500 persons. Due to land scarcity very high residential density pattern is observed and this results in trafic congestion especially during peak hours. The actual density in Palacode is far high than the indicated figurs in view of the presence of floting population and the commercial establishments located in and around the core town area. This Panchayat had 21500 people is now. hence here is main business ia agriculture, Tomato and Mango products. then tomato market is running is big level. Palacode town Panchayat have consisting of 18 wards and first implemented Solid Waste Management scheme activity start on 2004 in State level. Palacode Town Panchayat floting population more then 6500 peoples per day/ SHG and private sector be fully involved in SWM System. IEC activities of administative charges on erring citizens. When citizens do not throw solid waste on roads, the collection of Solid Waste will become efficent and easy. Strictly restricted plastic in Palacode Town Panchayat. Daily collected plastics send to shredding plastic machine and use of Plastic Bitumen roads.
பாலக்கோடு பேரூராட்சி தருமபுரி மாவட்டத்தில் வளர்ந்து வரும் ஒரு பேரூராட்சியாகும். இப்பேரூராட்சி 2.56 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகவும் 18 வார்டுகளை கொண்ட பகுதியாகவும் உள்ளது. தற்போதைய நிலவரப்படி மக்க ளதொகை சுமார் 21500 எனவும், வந்து செல்வோர் எண்ணிக்கை சுமார் 6500 ஆகவும் உள்ளது. இப்பேரூராட்சி பகுதியில் விவசாயமும், தக்காளி மற்றும் மாம்பழம் தொடர்பான தொழில்கள் நடந்து வருகின்றன. பாலக்கோடு பேரூராட்சியில் மாநிலத்திலேயே முதலாவதாக திடக்கழிவு மேலாண்மை திட்டம் துவக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. பாலக்கோடு நகரில் தூய்மையான சுற்று சூழலை உருவாக்குதலும், அதனை பராமரித்தலே இத்திட்டத்தின் நோக்கம் என்பதால் இத்திட்டத்திற்கு “தூய்மையான பாலக்கோடு“ என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி மகளிர் சுய உதவிக்குழு மூலம் வீடு தோறும் தள்ளுவண்டிகள் மூலம் குப்பைகள் நேரடியாக பெறப்படுகிறது. வீடுகளில் சேகரம் செய்யும் இடத்திலேயே குப்பைகள் மக்கும் மக்காத தன்மையுடையவையாக பிரிக்கப்படுகிறது. பிரிக்கப்படும் மக்கும் தண்மையுள்ள குப்பைகள் பேரூராட்சி உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு உரமாக்கப்படுகிறது. மக்காத குப்பைகள் தரம் பிரித்து மறு சுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. பாலக்கோடு பேரூராட்சி பகுதியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத்தில் உள்ள 32 பெண்களை தேர்ந்தெடுத்து இவர்களை “ஓம் சக்தி மகளிர் மேம்பாட்டு குழு” என்ற சுய உதவிக்குழுவாக பதிவு செய்யப்பட்டு குப்பை சேகரிக்கும் பணி இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. முதலில் காலை நேரத்தில் மட்டுமே பணி செய்து வந்த இவர்கள் தற்போது காலை, மாலை இரு நேரங்களிலும் பணிபுரிகின்றனர். மேலும், உரத்திடலுக்கு வரும் தெருக்குப்பைகளை தரம் வாரியாக பிரித்தல் பணிக்கு 13 பெண்களை தேர்ந்தெடுத்து ஸ்ரீ அக்குமாரியம்மன் மகளிர் குழு என்ற பெயரில் பணிபுரிகின்றனர். இப்பணியை செய்ய மகளிர் குழுவிற்கு நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ 200/- வீதம் 45 உறுப்பினர்களுக்கு சேவைக்கட்டணமாக பேரூராட்சி மூலம் வழங்கப்படுகிறது. மக்கும் குப்பைகளை உரமாகவும் மக்காத குப்பைகள் தனியாகவும் பிரித்து வைக்கப்படுகிறது. பேரூராட்சியிலிருந்து பெறப்படும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு அதனை அரவை செய்து தாருடன் கலந்து சாலை அமைக்கும் பணிக்காக விற்பனை செய்யப்படுகிறது.பாலக்கோடு பேரூராட்சி தருமபுரி மாவட்டத்தில் வளர்ந்து வரும் ஒரு பேரூராட்சியாகும். இப்பேரூராட்சி 2.56 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகவும் 18 வார்டுகளை கொண்ட பகுதியாகவும் உள்ளது. தற்போதைய நிலவரப்படி மக்க ளதொகை சுமார் 21500 எனவும், வந்து செல்வோர் எண்ணிக்கை சுமார் 6500 ஆகவும் உள்ளது. இப்பேரூராட்சி பகுதியில் விவசாயமும், தக்காளி மற்றும் மாம்பழம் தொடர்பான தொழில்கள் நடந்து வருகின்றன. பாலக்கோடு பேரூராட்சியில் மாநிலத்திலேயே முதலாவதாக திடக்கழிவு மேலாண்மை திட்டம் துவக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. பாலக்கோடு நகரில் தூய்மையான சுற்று சூழலை உருவாக்குதலும், அதனை பராமரித்தலே இத்திட்டத்தின் நோக்கம் என்பதால் இத்திட்டத்திற்கு “தூய்மையான பாலக்கோடு“ என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி மகளிர் சுய உதவிக்குழு மூலம் வீடு தோறும் தள்ளுவண்டிகள் மூலம் குப்பைகள் நேரடியாக பெறப்படுகிறது. வீடுகளில் சேகரம் செய்யும் இடத்திலேயே குப்பைகள் மக்கும் மக்காத தன்மையுடையவையாக பிரிக்கப்படுகிறது. பிரிக்கப்படும் மக்கும் தண்மையுள்ள குப்பைகள் பேரூராட்சி உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு உரமாக்கப்படுகிறது. மக்காத குப்பைகள் தரம் பிரித்து மறு சுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. பாலக்கோடு பேரூராட்சி பகுதியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத்தில் உள்ள 32 பெண்களை தேர்ந்தெடுத்து இவர்களை “ஓம் சக்தி மகளிர் மேம்பாட்டு குழு” என்ற சுய உதவிக்குழுவாக பதிவு செய்யப்பட்டு குப்பை சேகரிக்கும் பணி இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. முதலில் காலை நேரத்தில் மட்டுமே பணி செய்து வந்த இவர்கள் தற்போது காலை, மாலை இரு நேரங்களிலும் பணிபுரிகின்றனர். மேலும், உரத்திடலுக்கு வரும் தெருக்குப்பைகளை தரம் வாரியாக பிரித்தல் பணிக்கு 13 பெண்களை தேர்ந்தெடுத்து ஸ்ரீ அக்குமாரியம்மன் மகளிர் குழு என்ற பெயரில் பணிபுரிகின்றனர். இப்பணியை செய்ய மகளிர் குழுவிற்கு நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ 200/- வீதம் 45 உறுப்பினர்களுக்கு சேவைக்கட்டணமாக பேரூராட்சி மூலம் வழங்கப்படுகிறது. மக்கும் குப்பைகளை உரமாகவும் மக்காத குப்பைகள் தனியாகவும் பிரித்து வைக்கப்படுகிறது. பேரூராட்சியிலிருந்து பெறப்படும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு அதனை அரவை செய்து தாருடன் கலந்து சாலை அமைக்கும் பணிக்காக விற்பனை செய்யப்படுகிறது.
Town Information
City Name: | Palacode Town Panchayat |
Area in SqKm | 2.56 |
District | Dharmapuri |
Taluk | Palacode |
Name of Assembly Constituency | Palacode |
Name of Parliment Constituency | Dharmapuri |
No of Wards | 18 |
No of Streets | 126 |
2011 Population | |
Present Population |