Natham Town Panchayat is Selection Grade Town Panchayat having a Population of 23569 Nos as per 2011 census spread over an area of 12.43 SqKm. Natham Town Panchayat is located in the Dindigul district of the state. It is one of the Market center for the Mango, Coconut, Merchant of near by villages. The town is situated at a distance of 35 kms to the East side of Dindigul. Natham, situated in the left side of Dindigul – Karaikudi road. Natham is a Selection Grade Town Panchayat From 09.06.1969. The Main activities of the Natham Town Panchayat is export of Mango, Tamarind and Coconut production. The elected local body Committee decided on utilizing the monetary benefits through the trade for improving the civic facilities in the town. This town is 18 Administrative Wards.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேரூராட்சியின் மக்கள் தொகை 2011ம் ஆண்டின்படி 23660 ஆகும். இப்பேரூராட்சியில் 18 வார்டுகளும், 12.43 சதுரகிலோ மீட்டர் பரப்பளவும், இவற்றில் சுமார் 2 கி.மீ சுற்றளவுக்குட்பட்டு பாப்பாபட்டி, அய்யாபட்டி, மெய்யம்பட்டி, லி.பள்ளபட்டி, வெள்ளக்குட்டு, கல்வேலிபட்டி, கோவில்பட்டி ஆகிய 7 உட்கடை கிராமங்களும் அடங்கியுள்ளன. இப்பேரூராட்சியில் 152 தெருக்களும், 40.149 கி.மீ சாலைகளும் அடங்கியுள்ளன. இப்பகுதி விவசாயம் மற்றும் வணிக தொழில்கள் மிகவும் பெருகி வரும் நகரமாகும். இதுதவிர கடந்த 10 ஆண்டுகளில் பகவதிநகர், செல்லம்பிள்ளை தெரு, மீனாட்சிபுரம் வடக்கு தெரு மற்றும் அசோக்நகர் ஆகியவை விரிவாக்கப்பட்ட பகுதிகளாக வளர்ந்து வந்துள்ளது. இப்பேரூராட்சியின் தற்போதைய மக்கட்தொகை சுமார் 24747 ஆகும். இப்பேரூராட்சியில் தற்பொழுது மெய்யம்பட்டி, அம்மன்குளம், சித்தாறு, ஆர்.எஸ்115, செட்டிகுளம் மற்றும் காவேரி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரப்படுகிறது. அரசு விதிகளின்படி தற்போதைய நிலையில் நாளொன்றிற்கு நபர் ஒன்றிற்கு 58 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வரப்படுகிறது. மேலும் இது தவிர உள்ளூர் குடிநீர் ஆதாரங்களான 52 கைபம்புகள், 152 சிறுமின்விசை பம்புகள், 27 மின்விசை பம்புகள், 6 திறந்த வெளி கிணறுகள் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரப்படுகிறது. இப்பேரூராட்சி பகுதியில் திண்டுக்கல்-கொட்டாம்பட்டி சாலை, நத்தம் -மதுரை சாலை ஆகியவை செல்கின்றன. இங்கு மிக பிரசித்தி பெற்ற நத்தம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் மற்றும் கோவில்பட்டி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் உள்ளது. இதில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் இப்பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இக்கோவில் திருத்தலத்தில் திருவிழா அதிவிமர்சையாகவும் நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவிற்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் மார்ச் திங்களில் சுமார் 5 இலட்சம் பேர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
Town Information
City Name: | Natham Town Panchayat |
Area in SqKm | 12.43 |
District | Dindigul |
Taluk | Natham |
Name of Assembly Constituency | Natham |
Name of Parliment Constituency | Dindigul |
No of Wards | 18 |
No of Streets | 152 |
2011 Population | |
Present Population |