Kottaiyur Town Panchayat is Situated in Karaikudi Taluk Sakottai Block its is Named as Kottaiyur Due to The Heritage Houses Builted by Nagarathars as Like Fort;s and also the Godess Name Kottai Nachiamman Who Belongs to this Town Has Survive this Town , There are 3 Revenue villages in this Town Kottaiyur, K.Velangudi and Kallangudi The Famous and ancient Thirubagathesswarar Temple was Situated in Kallangudi it was Built by Later Pandyas . The Chevvai Festival and Ezhur Chevai was The Tradionala Festival Which was Celebrated during Chitria Masam DR.Alagappa Chettiyar Founder of Alagappa University and Educational Instituions Was Born in Kottaiyur .
கோட்டையூர் பேரூராட்சி, காரைக்குடி வட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியாகும். இவ்வூரானது கோட்டை போன்ற வீடுகள் நகரத்தார்களால் பாரம்பரியமான முறையில் கட்டப்பட்டுள்ளதால் இவ்வூர் கோட்டையூர் என்று அழைக்கப்படுகிறது, இவ்வூரில் அமைந்துள்ள பெண் தெய்வமான கோட்டை நாச்சியம்மன் பெயரில் இவ்வூர் கோட்டையூர் என்று அழைக்கப்படுகிறது, கோட்டையூர் பேரூராட்சி 15 வார்டுகள் உள்ளடங்கிய பேரூராட்சியாகும் மூன்று வருவாய் கிராமங்கள் உள்ளடங்கியதாகும், கோட்டையூர், கோ.வேலங்குடி, கல்லாங்குடி ஆகும், கல்லாங்குடியில் அமைதுள்ள திருபாகதீஸ்வரர் திருகோவில் பிற்கால பாண்டியர்களால் கட்டப்பட்டதாகும், கோட்டையூர் பகுதியில் அமைந்துள்ள வயல்நாச்சியம்மன் கோவில் ஏழூர் செவ்வாய் திருவிழா இப்பகுதியில் நடைபெறும் முக்கிய திருவிழாவாகும் சித்திரை மாதம் நடைபெறும் இத்திருவிழாவிற்கு ஏழு கிராமங்களை உள்ளடங்கிய மக்கள் வழிபடுவர். கல்வி தந்தை டாக்டர்.அழகப்ப செட்டியார் கோட்டையூரில் பிறந்துள்ளார், அழகப்பா பல்கலைகழகம், அழகப்பா கல்விநிலையங்கள் கோட்டையூர் அருகாமையில் அமைந்துள்ளன, பாரம்பரிய செட்டிநாடு அரண்மனை கோட்டையூர் அருகாமையில் அமைந்துள்ளது.
What's New
Town Information
City Name: | Kottaiyur Town Panchayat |
Area in SqKm | 6.750 |
District | Sivagangai |
Taluk | Karaikudi |
Name of Assembly Constituency | Thiruppathur |
Name of Parliment Constituency | Sivagangai |
No of Wards | 15 |
No of Streets | 136 |
2011 Population | 14766 |
Present Population | 15686 |