Courtallam Town Panchayat is a Special Grade Town Panchayat in Tirunelveli District. The Population of the town is 2089 as per 2011 census and the area town is 7.68 sq. kms. Total length of road 20.899 km. This Town Panchayat is located foot of East side of Western hills. It is one of the best tourism places in our state. During the seasonal period more than 25 Lakh people enjoying the health spa (Falls).
தென் இந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம், திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறப்பு நிலை பேரூராட்சி ஆகும். மேலும், இங்குள்ள தேனருவி, செண்பகாதேவி அருவி, பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி, பழத்தோட்டஅருவி, பாலருவி மற்றும் பல சிறு அருவிகள் குற்றாலம் பிரசித்தியடைய முக்கிய காரணமாகும். குற்றாலம் அருவிகள் சார்ந்த இடம் மட்டுமல்ல, தெய்வீகத் தலமும் கூட. சிவனின் ஐந்து சபைகளில் ஒன்றான சித்ரசபை இங்குதான் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியங்கள் பல இங்கு உள்ளது. மலையின் அடிவாரத்தில் உள்ள திருக்குற்றாலநாதர் திருக்கோவில் இந்து சமய ஆகமவிதிகளின்படி சங்கு வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காலங்களில் இங்குள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகளவில் ஆர்ப்பரித்து விழுவதைக் காண்கையில் வெள்ளியை உருக்கி விட்டாற்போல உள்ளம் கொள்ளை போகும் காட்சி சிறப்பானதாகும்.
Town Information
City Name: | Courttalam Town Panchayat |
Area in SqKm | 7.68 |
District | Tirunelveli |
Taluk | Tenkasi |
Name of Assembly Constituency | Tenkasi |
Name of Parliment Constituency | Tenkasi |
No of Wards | 8 |
No of Streets | 43 |
2011 Population | 2089 |
Present Population | 2600 |